திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் முகமது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதிமுக நிர்வாகி. முகமது மீரான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை நடத்தி வருகிறார். இவருக்கு முகமது ஷர்ஜூன்(29) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் முகமது ஷர்ஜூன் அதே பகுதியில் வசிக்கும் 35 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

அந்த பெண் கத்தி கூச்சலிட்டதால் இதை வெளியே சொல்ல கூடாது என மிரட்டி விட்டு முகமது தப்பி சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முகமது சர்ஜூனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.