கனடாவில் இந்தியர்களின் நிலை குறித்த சமூக வலைத்தளத்தில் வெளியான காணொளி ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் இந்திய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பலர் தந்தூரி பிலேம் எனப்படும் உணவகம் ஒன்றில் சர்வன்ட் மற்றும் வெயிட்டர் பணிக்கு சேர்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

வரிசையில் நின்ற இளைஞர் ஒருவர் கூறுகையில் தான் 12 மணிக்கு இவ்விடத்திற்கு வந்ததாகவும் ஆன்லைன் மூலமாக பணிக்கு விண்ணப்பித்த நிலையில் இது போன்று இங்கு காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார்.

மற்றொரு இளைஞர் கூறுகையில் கனடாவில் வேலை கிடைப்பது என்பது மிகவும் அரிதானதாக இருக்கிறது. கனடாவில் இரண்டு மூன்று வருடங்களாக இருக்கும் எனது நண்பர்கள் கூட வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர் என கூறியுள்ளார். இது கனடாவில் இருக்கும் இந்தியர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை அப்பட்டமாக காட்டியுள்ளது.

https://x.com/MeghUpdates/status/1841830408599507011