
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. அதிலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக தூத்துக்குடியில் ரயில் நிலையத்தில் மழை நீர் தேங்கி உள்ளதால் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி- திருநெல்வேலி பயணிகள் ரயில், தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரயில், வாஞ்சி- மணியாச்சி தூத்துக்குடி பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மைசூர் எக்ஸ்பிரஸ், முத்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கு பதிலாக மீளவட்டான் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.