ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கோர் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் 2500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த வெள்ளத்தினால் ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில் கால்நடைகளும் உயிரிழந்துள்ளது.

அதோடு பல ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ள பாதிப்பினால்  இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் வடக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் 300 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.