இந்தியாவில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையில் மகராஷ்டிரா மாநிலத்திலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சம்பவ நாளில் சிப்லன் என்ற பகுதியில் மழை பெய்தது. அப்போது பெரிய முதலை ஒன்று சாலையில் அசால்ட்டாக நடந்து சென்றது.

இதை பார்த்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சமடைந்தனர். கன மழை பெய்து கொண்டிருக்கும் சமயத்தில் வாகனங்களுக்கு நடுவே முதலை நடந்து சென்றதை வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால் சிவன் நதியிலிருந்து முதலை வெளியே வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் உள்ள 3 முதலை இனங்களில் தற்போது சாலையில் நடந்த சென்றது குவளை முதலை இனங்களில் ஒன்று என்று கூறப்படுகிறது.