
வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை, குந்தா, பந்தலூர் மற்றும் கூடலூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இன்று மூன்றாவது சனிக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.