தமிழகம் முழுவதும் இன்று சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் பிறகு கோயம்புத்தூர் மாவட்டங்களிலும் அரை நாட்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ‌ வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில் அது தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் சில நாட்களுக்கு அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த நாட்களில் மாணவர்களுக்கு பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார். மேலும் கனமழை மற்றும் தீவிர காற்று வீச கூடும் என்பதால் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதால் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டாம் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.