
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் தமிழகத்தில் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சளை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு ஜூலை 18 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.