பிரபல குஜராத்தி பட நடிகை சித்தி இத்னானி. இவர் தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்த நிலையில் முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு தி கேரளா ஸ்டோரி, காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் அவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். மேலும் தற்போது ரெஸ்டாரண்டில் மாடர்ன் உடையில் இருக்கும் அழகிய போட்டோக்களை‌ நடிகை சித்தி இத்னானி வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.