
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கபடி விளையாடும்போது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சை பகுதியில் கோவில் திருவிழாவை ஒட்டி கபடி போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் கலந்து கொண்ட 16 வயது சிறுவன் பிரதாப் விளையாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனே அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சம்பவ இடத்திலேயே சிறுவன் பிரதாப் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக விளையாடும்போது ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.