
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவராஜ் குமார். இவர் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிலையில் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் 600 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சிவராஜ்குமார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது மிகவும் கலகலப்பாக பேசினார். அவர் பேசியதாவது,எனக்கு அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை மிகவும் பிடிக்கும்.
கமல்ஹாசன் ரொம்ப அழகு. நான் மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் கண்டிப்பாக கமல்ஹாசனை திருமணம் செய்திருப்பேன். இதை நான் பல மேடைகளில் சொல்லி உள்ள நிலையில், ஒருமுறை அவர் வீட்டிற்கு வந்த போது அவரை நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். என் அப்பாவிடம் என்னை யார் என்று கமல் சார் கேட்க நான் ஒருமுறை உங்களை கட்டிப்பிடித்துக் கொள்ளலாமா என்று அவரிடம் கேட்டேன். அவரும் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டார். அதன்பிறகு நான் 3 நாட்கள் குளிக்கவே இல்லை. அவருடைய ஸ்மெல் என் மீது இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். மேலும் அப்படிப்பட்ட ஒரு தீவிர ரசிகன் நான் என்று கூறினார்.