கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்மான்விளை பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் நிறுவனம் கம்ப்யூட்டர் உதிரில் பாகங்கள் வாங்குவதற்காக புவனேஷ் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது புவனேஷ் கேட்ட 14 லட்ச ரூபாய் பணத்தை ஆனந்த் பல்வேறு தவணைகளாக அவர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். ஆனால் கொடுத்த பணத்திற்கான கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை அனுப்பாமல் புவனேஷ் குறைவான பொருட்களை அனுப்பியதாக தெரிகிறது. இது தொடர்பாக கேட்டபோது ஆனந்த் 7 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கொடுக்கவில்லை. இதனால் ஆனந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் புவனேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.