
சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் திமுக கட்சியின் எம.பி ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கம்யூனிச கட்சியை கடுமையாக விமர்சித்தார். இது பற்றி அவர் கூறும் போது, கம்யூனிச கட்சியின் கொள்கைகள் தோற்றுப் போய் விட்டது. கம்யூனிச கட்சியில் கோளாறு இல்லை. அது செம்மையான கட்சிதான்.
ஆனால் அந்த கட்சியின் தலைவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டதால் அந்தக் கட்சியின் தத்துவங்களும் நீர்த்துப் போய்விட்டது என்று கூறினார். இந்த பேச்சுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது ஆ ராசாவின் பேச்சுக்கள் மிகவும் தவறானது எனவும் கண்டிப்பாக அவர் தன் பேச்சை திரும்ப பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களுக்கு கம்யூனிச கட்சி முழு ஆதரவு கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.