
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நெடும்பிறை கிராமத்தில் குளத்தில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் உள்பட 3 சிறுவர்கள் குளத்து நேரில் மூழ்கி உயிரிழந்தனர். நெடும்பிறை கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் தீமிதி நிகழ்ச்சிக்காக குளத்தின் அருகே உள்ள பச்சையம்மன் கோவிலின் அருகில் இருந்து கரகம் எடுத்து வர ஊர் மக்கள் திரண்டனர்.
அப்போது குளத்து நீரில் ஒரு சிறுவன் சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே குளத்திற்குள் இறங்கி தேடிய போது மேலும் 2 சிறுவர்களை மீட்டனர். பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.