ரஷ்யாவைச் சேர்ந்த 2 எண்ணெய் கப்பல்கள் கருங்கடலில் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல்களில் மொத்தம் 29 ஊழியர்கள் சென்ற நிலையில் திடீரென கடுமையான புயல் வீசியது. இதில் கப்பல்கள் சிக்கி கடுமையான அளவுக்கு சேதம் அடைந்ததால் தற்போது கடலில் எண்ணெய் கசிந்து வருகிறது. இந்த தகவலை ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று 15 ஊழியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பல்கள் புயலில் சிக்கி இரண்டாகப் பிளந்துள்ளது. இதனால்தான் தற்போது எண்ணெய் கடல் நீரில் கசிந்து வருகிறது. இதில் ஒரு ஊழியர் உயிரிழந்த நிலையில் மற்றொரு கப்பலும் சேதமடைந்த நிலையில் மெதுவாக நகர்ந்து வருகிறது. அங்கு ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு குழுவினர் களமிறங்கியுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.