
முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தார். பொய் சொல்லலாம். பழனிச்சாமி அவர்களுக்கு பொய் சொல்லக்கூடாது என ஸ்டாலின் விமர்சித்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக எடப்பாடி கூறியதாவது, நாள் முதல்வராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை புள்ளி விவரத்துடன் துண்டு சீட்டு இல்லாமல் பேசுகிறேன்.
கடந்த மூன்று ஆண்டு ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் பற்றி பேச ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா? திமுக 2021 தேர்தலில் வெளியிட்ட நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. மக்களைப் பற்றி கவலைப்படாத முதல்வர் என்றால் இன்றைய முதல்வர் ஸ்டாலின் தான். எனக்கு திறமை இல்லை விமர்சிக்க அருகதை இல்லை என்றார் ஸ்டாலின். நான் சாதாரண கிளை செயலாளராக இருந்து இவ்வளவு பெரிய இயக்கத்தின் பொதுச்செயலாளராக உயர்ந்தவர்.
உங்களைப் போல தந்தையின் அடையாளத்தை வைத்து பதவி பெறுவது திறமை கிடையாது. கருணாநிதியின் அடையாளத்தை வைத்து தான் ஸ்டாலின் முதல்வர், கட்சித் தலைவர் ஆனார். நான் அப்படி கிடையாது. கருணாநிதி குடும்பத்தில் மட்டும் ஸ்டாலின் பிறக்கவில்லை என்றால் ஒரு கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது. என்னை பற்றி விமர்சிக்க அவருக்கு என்ன திறமை இருக்கு? என கலாய்க்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்