
நொய்டாவில் YES MADAM என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக நிறுவனத்திற்கு தகவல் கிடைத்த நிலையில் அந்த நிறுவனத்தின் ஹெச் ஆர் இது தொடர்பாக ஊழியர்களிடம் ஆய்வு மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன்படி ஒவ்வொரு ஊழியர்களிடமும் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்ட நிலையில் தங்களுக்கு உண்டாகும் மன அழுத்தம் அதாவது stress பற்றி ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த நிறுவனம் மன அழுத்தம் இருப்பதாக சொன்ன அனைத்து ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் ஒவ்வொரு ஊழியருக்கும் தனித்தனியாக விளக்க மெயில் அனுப்பவுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒவ்வொரு ஊழியரிடமும் மன அழுத்தம் தொடர்பாக கருத்து கேட்கப்பட்ட நிலையில் உங்களுடைய உணர்வுகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். வேலையில் இருக்கும் அழுத்தம் மற்றும் மன ரீதியான பிரச்சினை ஆகியவற்றை கருத்தில் கொண்டு உங்கள் நலனுக்காக அனைவரையும் பணி நீக்கம் செய்கிறோம் என்று கூறியுள்ளது. மேலும் இது தொடர்பான மெயில் தற்போது இணையதளத்தில் கசிந்த நிலையில் கருத்து சொன்னது ஒரு குத்தமா என்று அளவுக்கு அந்த நிறுவனத்தின் செயல்பாடு இருப்பதாக பலரும் விமர்சித்து வருகிறார்கள்.