தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 142-இன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

சட்டப்பேரவையில் இது பற்றி பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனை பற்றி பேச வாய்ப்பு தரவில்லை என கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளும் கட்சிக்கு ஒரு நீதி. எதிர்க் கட்சிக்கு ஒரு நீதியா என அதிமுகவினர் முழக்கம் எழுப்பி உள்ளனர்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, அதிமுக-வினர் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். அதற்கு நான் மகிழ்ச்சி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் காவி சட்டை அணியவில்லை என கூறினார். இதனைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்.