ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை நடந்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இபிஎஸ் கைக்கு அதிமுக சென்றுவிட ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவி வகித்து வரும் நிலையில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்தல்களிலும் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ் சமீப காலமாக தெரிவித்து வருகின்றார்.  இப்படியான நிலையில் ஓபிஎஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், அண்ணா குறிப்பிட்ட பாராட்டத்தக்க பண்புகளை இன்று வரை நான் கடைப்பிடித்து வருகிறேன்.

என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த ஜெயலலிதாவிற்கு என்றென்றும் விசுவாசமாக இருக்க நான் கடமைப்பட்டுள்ளேன். அரசியல் வரலாற்றில் எந்த நாட்டின் வரலாற்றிலும் ஒருவரை ஒரு அறியாசனத்தில் அமர வைத்துவிட்டு அதன் பிறகு உரியவருக்கே அந்த அரியாசனம் திரும்ப தரப்பட்டதாக வரலாறே இல்லை. அந்த புதிய வரலாற்றை படைத்து காட்டியவர் ஓபிஎஸ் என்று என்னைப் பற்றி பெருமையாக பரதனுடன் ஒப்பிட்டு பேசியவர் ஜெயலலிதா. மிகச் சிறிய பொறுப்புகளில் மற்றும் சாதாரண பொறுப்புகளில் தங்கள் வாழ்க்கையை தொடங்கியவர்.

ஒரு விதை வளர்கிறது என்று சொன்னால் அங்கு சத்தம் இருக்காது. ஆனால் மரம் விழுகிறது என்று சொன்னால் பலத்த சத்தம் இருக்கும். சத்தம் எங்கிருந்து வருகிறது என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். அது அழிவு பாதையை நோக்கி செல்கின்றது. வீழ்ச்சியை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது. அது ஒரு மூழ்கும் கப்பல். அப்படி மூழ்கும் கப்பலில் யாரும் ஏற மாட்டார்கள். அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றால் நன்றி மறந்த துரோகத்தின் மறு உருவமாக விளங்குகின்ற பொய்மையின் மறு வடிவமாக திகழும் நயவஞ்சகம் அகற்றப்பட வேண்டும். இல்லையென்றால் வீழ்ச்சி என்பது நிச்சயம். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கருவாடு மீனாகாது, கறந்த பால் மடிப்புகாது, நயவஞ்சகம் வெற்றி பெறாது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.