
இந்தோனேசியா நாட்டில் கடந்த 24ஆம் தேதி நண்பனே தன்னுடைய நண்பனை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முதலில் கோழி வந்ததா அல்லது முட்டை வந்ததா என்ற விவாதத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது அந்த நாட்டில் கதிர் மார்க்கஸ் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை தொழிலாளியாக இருக்கும் அவருடைய நண்பர் ஒருவர் மது குடிக்க கடந்த 24ஆம் தேதி அழைத்துள்ளார். அவர்கள் இருவரும் மது அருந்தி கொண்டிருந்தபோது தொழிலாளி முதலில் கோழி வந்ததா இல்லை முட்டை வந்ததா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே விவாதம் ஏற்பட்ட நிலையில் தகராறு ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து பதில் சொல்ல விரும்பாத கதிர் வீட்டிற்கு கிளம்பினார். இதனால் கோபம் அடைந்த தொழிலாளி அவரை கத்தியால் சரமாறியாக குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொழிலாளியை கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து மார்க்க உடல் கடந்த 26ம் தேதி அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளியின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 18 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.