தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மையம் கொண்டுள்ளது. கரையைக் கடந்த பின்னரும் புயல் வலுவிழக்காமல் இருக்கிறது. ஏற்கனவே சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் புயல் காரணமாக கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் புயல் வலுவிழக்காமல் இருப்பதால் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டிற்கு இன்று 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதுச்சேரி, கடலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்று 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, நாமக்கல், சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பொழிய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ‌8 மாவட்டங்களில் 11 முதல் 17 செண்டிமீட்டர் அளவிற்கும் மழை பொழிய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காரைக்கால், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், நாகை, திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.