ஜெயம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஜெயம் ரவி. இவருக்கு முதல் படமே நல்ல வரவேற்பு கொடுத்தது. அதன் பிறகு பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். கடைசியாக நடிப்பில் சைரன் என்ற படம் வெளியாகி இருந்தது. இவர் கடந்த 2009 ஆம் வருடம் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சமீபத்தில் தன்னுடைய மனைவி ஆர்த்தியோடு பேட்டி ஒன்றில் ஜெயம்ரவி கலந்து கொண்டார். அப்பொழுது கர்ப்ப காலத்தில் ஒரு கணவனாக ஜெயம்ரவி எப்படி தன்னை கவனித்துக் கொண்டார் என்று ஆர்த்தி கூறியுள்ளார்.

அதாவது முதல் மகன் ஆரவ் பிறக்கும்பொழுது ரவி ஊரிலேயே இல்லை. அவர் இங்கே இருக்க வேண்டும் என்று தான் திட்டமிட்டார். ஆனால் என்னுடைய பிரசவம் சீக்கிரமாக நடந்துவிட்டது. எனக்கு தெரியும் அவருடைய தொழில் அப்படித்தான் என்று. கர்ப்ப காலத்தில் வாந்தி எடுக்கும் போதெல்லாம் அதை ரவி கையிலேயே பிடிப்பார் .பக்கத்திலேயே இருப்பார். அதிகாலை 3, 4 மணிக்கு எல்லாம் எழுந்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று கூறினால் எழுந்து வருவார்.

பின்னர் 5 மணிக்கு தூங்கிவிட்டு ஷூட்டிங் செல்வார். ஒரு கணவனாக அவருக்கு 100க்கு மேல் மார்க் கொடுப்பேன். ஒரு கணவனாக எல்லோரும் ரவி மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன் என்று கூறியிருக்கிறார்.