
2017 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட “மாத்ரு வந்தனா யோஜனா” திட்டம் கர்ப்பிணிப் பெண்களுக்கும், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் நிதியுதவி வழங்குகிறது. இது பெண்கள் பாதுகாப்பு திட்டமான மிஷன் சக்தியின் துணைத் திட்டமாக செயல்படுகிறது. பிறந்த பச்சிளம் குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பிற நோய்களிலிருந்து பாதுகாக்க இந்த நிதி உதவி உதவுகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெற 19 வயது நிரம்பிய தலித்துகள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். மத்திய மற்றும் மாநில அரசுகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவர்கள்.
முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், இரண்டு தவணையாக ரூ.5000 வழங்கப்படும்; இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், ரூ.6000 வழங்கப்படும். இந்த நிதி 3 தவணைகளில் வழங்கப்படுகிறது: முதல் தவணை ரூ.1000, இரண்டாவது தவணை ரூ.2000, மூன்றாவது தவணை ரூ.3000.
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள பெண்கள் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களை நேரடியாக அணுகலாம். விண்ணப்பத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தால், உதவிக்கு 7998799804 என்ற ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.