தமிழகத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் பிறந்த குழந்தையின் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்ப்பதற்காக நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ள நிலையில் குழந்தை பிறந்து முதல் ஆயிரம் நாட்கள் வரையிலும் 5294 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மூன்று தவணைகளில் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

அதன்படி முதல் தவணையாக 20, 28, 38 ஆவது வாரங்களில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், ஆறாவது மாதம் 500 ரூபாய் மற்றும் 24 ஆவது மாதம் 500 ரூபாய் என மொத்தம் மூன்று தவணைகளில் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். தமிழக அரசின் இந்த புதிய திட்டத்திற்கு 38.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் குழந்தை பிறந்து இரண்டு வயது வரை குழந்தையின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.