மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. இதனையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதன் காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் இருக்கிறதா? என்பதை சோதிக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு இருந்தால் கருவின் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.