
உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்தின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நவநீத் என்ற கர்ப்பிணி பெண் மாவானாவில் உள்ள ஜே.கே மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து வரப்பட்டார். இதனையடுத்து திடீரென அப்பெண் பிரசவத்திற்குப் பிறகு இறந்தார்.
இந்நிலையில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. மறுநாள் குடும்ப உறுப்பினர்கள் எலும்புகளை சேகரிக்கும் போது சாம்பலில் அறுவை சிகிச்சை பிளேடு கண்டுபிடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையில் டாக்டர்கள் அலட்சியமாக இருந்ததால், வயிற்றில் பிளேடை விட்டுச் சென்றதால் அப்பெண் இறந்ததாக கூறப்படுகிறது.