மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை அருகே திமுக பிரமுகரின் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் தமிழக ஆளுநர் ஆரியன் ரவியை மாற்றவில்லை என்றால் மதுரை சிம்மக்கல் கலைஞர் சிலை முன்பு ஜூன் 28ஆம் தேதி தீக்குளிப்பேன் என்று திமுகவை சேர்ந்த மானகிரி கணேசன் பரபரப்பு போஸ்டரை ஒட்டி உள்ளார்.

இது மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக ஆளும் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டை வருகின்றன. மேலும் ஆளுநரை மாற்றக் கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.