
சென்னையில் நேற்று முன்தினம் கலைஞர் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் வெளியிட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்நிலையில் கலைஞர் நாணயம் எங்கு கிடைக்கும் அதன் விலை என்ன போன்ற தகவல்களை தற்போது முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதாவது நேற்று திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி நாணயம் சென்னை அறிவாலயத்தில் இருக்கிறது. இந்த நூறு ரூபாய் நாணயத்தை யார் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். இதன் விலை ரூ.10,000 ஆகும். மேலும் யார் வேண்டுமானாலும் சென்னை அறிவாலயத்திற்கு சென்று ரூ.10,000 கொடுத்து நாணயத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்