தமிழக உயர்கல்வித்துறையில் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. அதில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி ஆன்லைன் மூலமாக தொடங்கியது. அப்போதிலிருந்தே ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகிறார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.