மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்த 27 வயது கவுரவ் என்பவர் அவர் திருமணம் செய்யவிருந்த பெண் மற்றும் அவருடைய காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கௌரவ்  என்பவருக்கு மேகா என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

இதில் நேகா ஏற்கனவே சௌரப் நகர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனால் சௌரப் நேகாவை திருமணம் செய்யக்கூடாது என்று கௌரவை மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி கௌரவ் தன்னுடைய காரில் திருமணத்திற்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தபோது சில மர்ம நபரக்ள் அவர்களின் காரை வழிமறித்து அவருடைய தலையில் கடுமையாக அடித்தனர்.

இதில் அவர் கோமா நிலைக்கு சென்ற நிலையில் உடனடியாக குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது கௌரவ் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன்பாக நேகா, அவருடைய காதலன் மற்றும் அவருடைய நண்பர் சோனு ஆகியோர் தான் தன்னை இந்த நிலைக்கு ஆக்கியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் மூவரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.