
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சயிப் அலிகான். இவர் கடந்த 16ஆம் தேதி மும்பையில் உள்ள பாந்திரா வீட்டில் வைத்து கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் வங்கதேச நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக சிசிடிவி தெரிந்த அந்த வங்கதேச நபரின் போட்டோவோடு ஒத்து போனதால் ஆகாஷ் கனோஜியா என்ற 31 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்த நிலையில் சில மணி நேரம் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவருடைய போட்டோ டிவியில் வெளியானதால் அவருடைய வாழ்க்கையை தலைகீழாக மாறிவிட்டது. அதாவது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் திருமணத்தை பெண் வீட்டார் நிறுத்திவிட்டனர். அதோடு அவருடைய வேலையும் பறிபோய்விட்டது. குடும்பத்தினர் மிகுந்த அவமானத்தை சந்தித்துள்ளனர். இதனால் தன்னுடைய வாழ்க்கையை இழந்து தவிப்பதாகவும் மும்பை போலீசார் தன்னுடைய வாழ்க்கையை அழித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் நடிகர் சயிப் அலி கான் வீட்டின் முன்பு நின்று தனக்கு ஒரு வேலை வேண்டும் என்று நியாயம் வேண்டுமென்றும் கேட்கப்போவதாக அந்த வாலிபர் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.