தமிழ் திரை உலகில் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் சின்னதிரை நிகழ்ச்சி மூலமாக பிரபலமாகி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். 2002ல் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மகள் இந்திரஜா பிகில் படத்தின் மூலம் பிரபலமானார்.

இதனையடுத்து இந்திரஜாவிற்கு மாமன் முறை ஆன கார்த்திகே என்பவரை  திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர்கள். இந்த நிலையில் இந்திரஜா விஜய் டிவியில் நடைபெற உள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் கார்த்திகோடு கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.