ராணிப்பேட்டை மாவட்டம்  சக்கரவல்லூர் என்னும் கிராமத்தில் ஷாருக்கான்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. அதன் பின் திருமணமான நாளிலிருந்து கணவன் மனைவிக்கு  இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் சம்பவ நாளில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் ஷாருக்கான் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷாருக்கான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் இறந்ததற்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்காக குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.