
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் நந்தகிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 25 வயதில் அஜித் குமார் என்ற மகன் இருந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக அஜித்குமாருக்கு சங்கீதா என்ற 22 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இடையே திருமணமான நாளிலிருந்து ஒத்துப் போகாததால் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்றும் இவர்களுக்குள் சண்டை வெடித்தது. குடும்பத் தகராறு முற்றிய நிலையில் கோபமடைந்த இருவரும் தனித்தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமான ஆறு மாதத்தில் புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது