கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலை மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் இன்பராஜ்(19). புதுக்கோட்டை மாவட்டம் செவகல்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் பூவரசன்(18).

இன்பராஜும், பூவரசனும் குளித்தலை மாவட்டத்திலுள்ள கருணாநிதி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். நண்பர்களாகிய இருவரும் நேற்று கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது ஆண்டவர் கோயில் அருகே குளித்தலை நோக்கி திரும்பிய போது, எதிரே வந்த லாரி மோதி இருவரும் விபத்துக்குள்ளானார்கள்.

விபத்தில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயை இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான ஆண்ட்ரூஸ்(29) என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.