கடலூர் மாவட்டம் கணிசப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். கட்டிட தொழிலாளியான இவரது மகன் கிருஷ்ணா செட்டிபாளையம் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இன்று காலையில் கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்த கிருஷ்ணா சட்டையை அயன் பண்ணிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.