திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் திருவள்ளூர் கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கல்லூரியில் படிக்கும் முதுநிலை மாணவர் ஒருவர் இளநிலை பட்டப்படிப்பு படிப்பு மாணவியை ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது. சம்பந்தப்பட்ட மாணவியின் சகோதரரும் அதே கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் மாணவியின் சகோதரருக்கும் காதலிப்பதாக கூறும் மாணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் மாணவியின் உறவினர்கள் சிலர் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து மற்றொரு தரப்பினரை தகாத வார்த்தைகளால் பேசியதால் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இது பற்றி அறிந்த போலீசார் மோதலில் ஈடுபட்ட 15 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.