
கர்நாடக மாநிலம் கோலார் புறநகர் பகுதியில் ஆர்.எல்.ஜாலப்பா பி யு சி கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் முதலாமாண்டு படித்து வருகின்றார். இந்த மாணவி கடந்த சில நாட்களாக வகுப்பறையில் சோர்வுடன் காணப்பட்ட நிலையில் நேற்று கல்லூரிக்குச் சென்ற மாணவிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவி கழிவறைக்கு சென்ற போது திடீரென்று அங்கிருந்து குழந்தைகளும் சத்தம் கேட்டது.
உடனே பேராசிரியர்கள் கழிவறைக்கு சென்று பார்த்த போது மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது தெரியவந்தது. இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தை மற்றும் மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணவிக்கும் வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் மாணவி வாலிபருடன் நெருக்கமாக பழகி உல்லாசமாக இருந்ததால் கர்ப்பமாகியுள்ளார்.
இதனை பெற்றோருக்கு தெரியாமல் மறைத்துள்ளார். பெற்றோர்களும் வயிறு வெளியே தெரியாததால் கவனிக்கவில்லை. இந்த நிலையில் கல்லூரியில் வைத்து மாணவி பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பெற்றெடுத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.