
கோயம்புத்தூர் மாவட்டம் ஜே.ஜே நகர் மேம்பாலம் அருகே கல்லூரி மாணவர்களுக்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது உறுதியானது. இதனால் கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது தீபன் ராஜ், கிருத்திக் ரோஷன் ஆகிய இருவரும் பைக்கில் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.
அப்போது பைக்கில் இருந்து தவறி விழுந்ததால் ஒருவருக்கு கையிலும், மற்றொருவருக்கு காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 1.300 கிலோ கஞ்சா, 3 கிராம் மெத்தபெட்டமைன், ஒரு திருட்டு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.