
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ரகு இன்ஜினியரிங் கல்லூரியில், ஒரு மாணவி தனது பேராசிரியர் மீது செருப்பால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின்படி, சிவில் பிரிவின் HOD ஆக பணியாற்றும் பேராசிரியர், வகுப்பின் போது மாணவிகள் சிலர் செல்போன் பயன்படுத்துவதை கவனித்து, அந்த மாணவியின் கைபேசியை பறித்தார். இதனை எதிர்த்த மாணவி, வகுப்புக்கு பிறகு பேராசிரியரிடம் தகராறில் ஈடுபட்டு, மிகுந்த ஆவேசத்தில் பேசினாராம். அதன் பின், திடீரென தன் செருப்பை எடுத்து, பேராசிரியரை அடித்து தாக்கியுள்ளார். இது அங்கிருந்த மாணவர்களால் வீடியோ எடுக்கப்பட்டது.
టీచర్ని చెప్పుతో కొట్టిన విద్యార్థిని
ఫోన్ తీసుకొని ఇవ్వలేదని టీచర్ని బూతులు తిడుతూ చెప్పుతో కొట్టిన విద్యార్థిని
విజయనగరం – రఘు ఇంజనీరింగ్ కళాశాలలో టీచర్ ఓ విద్యార్థిని ఫోన్ తీసుకుందని.. టీచర్తో వాగ్వాదానికి దిగిన స్టూడెంట్
ఇద్దరి మధ్య గొడవ పెరగడంతో.. ఆ ఫోన్ 12 వేలు… pic.twitter.com/y0aTMNpzHr
— Telugu Scribe (@TeluguScribe) April 22, 2025
இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. “இது ஒரு தனிப்பட்ட விவகாரம் அல்ல; இன்றைய இளைய தலைமுறையின் செல்போன் அடிமைத்தனம் மற்றும் ஆசிரியர்களின் மீது உள்ள மரியாதையின்மை” என்பதற்கான தெளிவான எடுத்துக்காட்டு என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். மாணவி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனும் கோரிக்கைகள் எழுகின்றன. கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கின்றன என்பது பெற்றோர்களிடையே கவலையை உருவாக்கியுள்ளது.