தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மாணவர்கள் விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்வி கடன் மற்றும் உதவி தொகை பெறுவது எப்படி உள்ளிட்ட அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாணவர்கள் இது தொடர்பான சந்தேகங்களை 14417 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிற மாநிலங்கள் அல்லது மாவட்டங்களில் உள்ள நல்ல கல்லூரிகளில் தங்கள் குழந்தைகளை அனுப்ப தங்கும் பெற்றோருக்கும் அதற்கு உரிய ஆலோசனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.