திமுகவின் 15 மாவட்டங்களை சேர்ந்த முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இந்நிலையில் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழை தமிழினத்தை, தமிழ்நாட்டு மக்களை இந்திய ஜனநாயகத்தை காப்பதற்கான களம் தயாராகிவிட்டது. வெறுப்பையும் பிரிவினையையும் மக்களிடையே விதைத்தவர்கள் இப்போது இந்திய மக்களின் ஒற்றுமையை கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். களம் காணவும் களமாடுவோம்! நாற்பதும் நமதே நாடும் நமதே! இன்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.