
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நடிகர் விஜய் பேசியதாவது, கோயம்புத்தூர் என்றாலே மக்களின் மரியாதை தான் முதலில் நினைவுக்கு வருகிறது. பெயர்தான் பூத் லெவல் பயிற்சி பட்டறை. இங்கு வேறு ஏதோ நடப்பது போல் தோன்றுகிறது.
பூத் கமிட்டி என்றால் ஓட்டுக்காக நடைபெறுவது மட்டும் கிடையாது அது மக்களோடு இணைவதற்கான வாய்ப்பு என்று நான் பார்க்கிறேன். நான் பழைய கதைகளை பேசி அரசியல் செய்யப் போவது கிடையாது. இனி யாரும் பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வர முடியாது. மனதில் நேர்மையும் கறை படியாத அரசியல் கைகளும் இருக்கிறது.
நமக்கான களம் தயாராக இருப்பதால் இனி யாரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வர விட மாட்டோம். மக்களின் நலனுக்காக தமிழக வெற்றி கழகம் மட்டும் தான் ஆட்சிக்கு வரவேண்டும். நான் என்ன செய்ய இருக்கிறேன் என்பதை மக்களிடம் கொண்டு செல்லும் போர் வீரர்கள் நீங்கள். நம்பிக்கையோடு களமிறங்குகள் வெற்றி நிச்சயம் என்றார். மேலும் நடிகர் விஜய் பேசும்போது தொண்டர்கள் மிகவும் ஆரவாரத்தோடு உற்சாகமாக குரல் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.