தஞ்சாவூர் மாவட்டம் காசாங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி நாகலட்சுமி. இந்த தம்பதியினருக்கு 2  மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 13-ஆம் தேதி நாகலட்சுமி தனது கணவர் வீட்டுக்கு பின்புறம் இருக்கும் இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனால் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமலேயே பிரகாஷின் உடலை எரித்து விட்டனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த வீரக்குமார்(25) என்பவருக்கும் நாகலட்சுமி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது தெரியவந்தது. சம்பவம் நடந்த அன்று நாகலட்சுமியும், வீரக்குமாரும் வீட்டில் தனிமையில் உல்லாசமாக இருந்ததை பிரகாஷ் பார்த்துவிட்டார். இதனால் இருவரும் இணைந்து பிரகாஷின் கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இதனால் நாக லட்சுமியையும், வீரக்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.