ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ரவி கோத்ரா மற்றும் ரமேஷ் கக்கரி தம்பதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் ரதிக்கு வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கள்ளக்காதல் நாளுக்கு நாள் வளரவே ரதி அடிக்கடி தன்னுடைய கள்ளக்காதலனை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தார். இந்நிலையில் தன்னுடைய கள்ளக்காதலுக்கு குழந்தை இடையூறாக இருப்பதாக எண்ணி ரதி குழந்தையை கோபத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் குழந்தையின் உடலை சாக்கடையில் வீசிவிட்ட நிலையில் ஜார்கண்டிலிருந்து ரதி நாமக்கல் வந்துவிட்டார்.

இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை பார்த்து வந்த நிலையில் ஜார்கெண்ட் மாநில போலீசார் ரதியை தேடியதில் அவர் இங்கு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட போலீசார் உதவியுடன் ரதியை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.