
மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு என்ற பகுதியில் பொன்வேந்தன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் கால் டாக்ஸி டிரைவர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் முத்து பிரியா (30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் முத்துபிரியா பாலமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு அவருக்கு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரம் பொன் வேந்தனுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் தன் மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக முத்து பிரியா தன் குழந்தைகளை விட்டுவிட்டு கள்ள காதலனுடன் வீட்டை விட்டு ஓடி விட்டார்.
இதனால் பொன்வேந்தன் மிகுந்த மனவேதனைக்கு ஆளானார். இந்நிலையில் சம்பவ நாளில் பாலமேடு காவல் நிலையத்திற்கு அவர் சென்றார். அங்கு காவல் நிலையத்தில் முன்பாக பொன்வேந்தன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அவரை காவல்துறையினரும் அருகில் இருந்த மக்களும் இது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தாய் கள்ளக்காதலனுடன் ஓடி விட்ட நிலையில் தந்தையும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததால் 3 குழந்தைகளும் பரிதவிப்பில் இருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.