சென்னை ஆவடியில் வசித்து வருபவர் சிவக்குமார். 33 வயதான அவருடைய தோழி நித்யா. இவர்கள் இருவரும் ஜிம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த ஜிம்மிற்கு ஆவடி சேர்ந்த 35 வயது பெண் உடல் எடையை குறைப்பதற்காக வந்துள்ளார். அவருக்கும் சிவகுமாருக்கும் ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனை அடுத்து இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததையடுத்து நித்யா அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு அந்த பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் புகார் அடிப்படையில் நடந்த விசாரணையில் சிவக்குமார், நித்யா ஆகிய இருவரும் கள்ளக்காதலர்கள் எனவும் திட்டமிட்டு இவ்வாறு அந்த பெண்ணிடம் பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது.