மதுரை மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டி பகுதியில் பாரிச்சாமி-பரிமளா (49) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இதில் பாரிச்சாமி மஞ்சம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் வேலை பார்த்த நிலையில் அங்கு தன்னுடைய குடும்பத்துடன் தங்கி இருந்தார். அந்த கோழிப் பண்ணையில் உரிமையாளர் ரமேஷ். இவர் அபுதாபியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் விடுமுறைக்கு கோழி பண்ணைக்கு வரும்போது பரிமளா உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இந்த விவகாரம் பாரிச்சாமிக்கு தெரிய வரவே அவர் தன் மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் கேட்காததால் வேறொரு கோழி பண்ணைக்கு அவர் வேலைக்கு சென்ற நிலையில் அந்த தன் குடும்பத்தையும் அழைத்து சென்றுவிட்டார். இந்நிலையில் பரிமளா கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை ரமேஷ் உடன் சேர்ந்து தீர்த்த கட்ட முடிவு செய்த அதற்காக கூலி ஆட்களை ஏவியுள்ளார். அதன்படி 17 வயது சிறுவன் ஒருவனுக்கு ரூ.1 1/2 லட்சம் கொடுப்பதாக கூறி கூலி ஆட்களை ஏவித் தன் கணவர் பாரிசாமியை கொல்ல திட்டமிட்டார்.

அதன்படி கடந்த 12ஆம் தேதி பெரியப்பட்டி பகுதியில் உள்ள கோழிப்பண்ணைக்குள் கூலிப்படையினர் சென்றனர். அவர்கள் அங்கு மின்சாரத்தை அணைத்துவிட்டு பாரிசாமியை கட்டையால் பலமாக தாக்கினர். அப்போது குழந்தைகள் தடுக்க வந்ததால் குழந்தைகளுக்கு அடிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். அதன் பிறகு ரத்த  வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாரிச்சாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பரிமளா எதுவும் நடக்காதது போல் இருந்தார்.

இருப்பினும் ஒரு கட்டத்தில் இனிமேல் எங்கள் விஷயத்தில் தலையிட்டால் இப்படித்தான் நடக்கும். என்னுடைய ஆட்கள்தான் உங்களை கொலை செய்ய வந்தனர் என்று தன் கணவரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பாரிச்சாமி தன்னுடைய தாயாரிடம் நடந்ததை கூற அவர் வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து குமார் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்த நிலையில் மற்ற 5 பேரை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.