கர்நாடக மாநிலத்தின் பிரகாஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹர்ஷிதா (28) என்ற பெண்ணுடன் ‌ instagram மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்தனர். அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒன்றரை வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் instagram மூலமாக குண்டா என்ற வாலிபருடன் ஹர்ஷிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் ஹர்சிதா கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக அவருடன் வீட்டை விட்டு ஓடி விட்டார். இது தொடர்பாக பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனால் ஹர்ஷிதா வீட்டிற்கு திரும்பினார். இருப்பினும் ஹர்ஷிதா குண்டாவுடன் செல்ல விரும்பியதால் தன் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கூலி ஆட்களை ஏவி தன் கணவரை தீர்த்து கட்டினார். பின்னர் விபத்தில் கணவர்  இறந்து விட்டதாக நாடகமாடினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கூலிப்படையை சேர்ந்த இருவர், ஹர்ஷிதா ஆகியோரை கைது செய்த நிலையில் தலைமறைமாக உள்ள குண்டாவை தேடி வருகிறார்கள்.