மராட்டிய மாநிலம் புனேவில் கள்ளக்காதலை தட்டி கேட்டதற்காக கணவனை அவருடைய மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரவீந்திர காசிநாத் கபூர் என்ற 45 வயது நபருக்கு சோபனா ரவிந்திர கபூர் என்ற 42 வயது மனைவி இருந்துள்ளார்.

இதில் ஷோபனா Gorakh trimbak என்ற 41 வயது நபருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில் இந்த விவகாரம் ரவீந்திராவுக்கு தெரிய வந்ததால் தன் மனைவியை கண்டித்துள்ளார்.

இதன் காரணமாக தன் கள்ளக்காதலுடன் சேர்ந்து அவர் தன் கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி ரவீந்தரா தூங்கிக் கொண்டிருக்கும் போது சோபனாவின் கள்ளக்காதலன் கரண்டியால் தலையில் கொடூரமாக அடித்து கொலை செய்தார். இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை இரவு நடந்த நிலையில் செவ்வாய்க்கிழமை போலீசாருக்கு தகவல் தெரிய வந்தது.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவிந்தரா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவருடைய மனைவி மற்றும் கள்ளக்காதலனை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரவீந்திராவின் நெருங்கிய நண்பர்தான் அவருடைய மனைவியுடன் தகாத உறவில் இருந்ததோடு அவருக்கு சம்பவ நாளில் மது ஊற்றி கொடுத்து கொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.